பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் செய்த மாயை 65,

கொள்ளும்படி கூறினார், சுப்பராமனும் சில நிபந்தனை களின் பேரில், சொல்லிக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.

“சிட்சை முடிந்து நன்றாகக் கச்சேரிகள் செய்கிறவரை திருமணத்தைப் பற்றியே சிந்திக்கக்கூடாது. அதன் பிறகு, மணந்து கொண்டாலும், உன் வித்தையை வளர்த்து ஆதரிக்கும் குணமுடைய கணவனையே தேர்ந்தெடுத்து மணக்க வேண்டும்’ என்ற பாகவதரின் நிபந்தனைகளுக்குச் சுந்தரி எவ்வித மறுமொழியும் கூறாமல் சம்மதம் தெரிவித் தாள். இதை அவர் எதிர்பார்க்கவில்லை என்றாலும்: அதற்கு மேலும் மறுத்துப் பேச முடியவில்லை.

விஜயதசமியன்று சுந்தரிக்கு சிட்சை ஆரம்பமாயிற்று. தட்டு நிறையப் பூவும் பழமும் பணமுமாகக் கொண்டு வந்து வைத்துக் குருவை வணங்கினாள். சுந்தரி, வயதில் தன்னொத்தவளாயினும் குருபத்தினி என்ற முறையில் உள்ளே சென்று லட்சுமியையும் வணங்கிவிட்டுத் திரும் பினாள்.

பெண் கெட்டிக்காரிதான்’ என்று கண்டுகொண்ட சுப்பராமனுக்கு உள்ளூர மகிழ்ச்சி, பரம திருப்தி. இரண் டாம் நாளும், சுந்தரி பாட்டியுடன் தவறாமல் பாகவதர் வீட்டிக்கு வந்து கற்றுக் கொண்டு போனாள் அதன் பின் வாரம் ஒரு முறை பாகவதர் திருவிடை மருதுாருக்குச் சென்று பாடம் சொல்லிக் கொடுத்து வருவார்.

சுந்தரியின் ஆர்வத்தையும், சங்கீதத்தில் அவள் அடைந்து வரும் அபிவிருத்தியையும் கண்டு, சுப்பராமன் உள்ளத்துக்குள்ளேயே பூரித்தார். தாம் கற்ற வித்தையை யெல்லாம் அவளுக்கு அப்படியே கரைத்துப் புகட்டினார். அவளும், அதை அப்படியே கிரகித்துக் கொள்ளக்கூடிய சிறந்த பாத்திரமாகத் திகழ்ந்தாள்.