பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 புல்லின் இதழ்கள்

அல்ல. நான்; ஆனால் உங்கள் மனைவியைப்பற்றிச் சிந்திக் காமல் இருக்க முடியவில்லை. நான்தான் உங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்தேன் என்று துாற்றலாம். ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணின் வாழ்க்கைக்குப் போட்டி யாக முளைத்த கொடுமைக்கு ஆளாகி விட்டேன். இந்தத் துயரந்தான் என் மனத்தைப் பெரிதும் வருத்துகிறது. ஆனால் இனிமேல் அதைப் பற்றியும் சிந்தித்துப் பயன் இல்லை. விதிப்படி நடப்பவை நடந்தேறி விட்டன. இதோ உங்கள் சொத்து ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறியவள் அவர் பாதங்களில் வணங்கினாள்.

பாகவதர் ஒரு நிமிஷம் வெடித்துச் சிதறுவதுபோல் வெலவெலத்துப் போய் விட்டார். அவரது நாடி நரம்பு கள் எல்லாம் துடித்தன. உடல் முழுவதும் தெப்பமாக நனைந்துவிட்டது. முதலில் தம் செவிகளையே அவரால் நம்ப முடியவில்லை என்றாலும், கண்முன் நிகழும் காட்சி களைக் ஏற்காமல் இருக்க முடியவில்லையே!

அப்போது அவர் உள்ளத்தில் ஒர் அர்த்த மற்ற சந்தேகம் எழுந்தது. தன் எண்ணத்தைக் கேட்டவுடன் சுந்தரி வேதனைப்படுவாள், அல்லது ஒரேயடியாக மறுத்து விடுவிாள் என்று அவர் எண்ணியதற்கு மாறாகக் காரியங் கள் நடைபெறவே, அவளும் ஒரு வேளை தன்னையே நினைத்துக் கொண்டிருப்பாளோ?’ என்று எண்ணினார். ஆனால் அது எவ்வளவு அபத்தம் என்பதை அவரால் உணர முடிந்தது.

எண்ணங்களின் சுமையாக இயங்கிக்கொண்டிருந்த பாகவதரைச் சுந்தரியின் ஸ்பரிச உணர்ச்சி, சுய உணர் வுக்கு உந்தித் தள்ளியது. அவர் பாதங்களில் ‘டப் டப்’ பென்று உஷ்ணமான கண்ணிர்த் துளிகள் விழுந்தன. அவளைத் தூக்கி நிறுத்தினார் பாகவதர்.