பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. பிரிந்தவர் கூடினர்

அன்று சுந்தரியின் வார்த்தைகளைக் கேட்டதும் பாகவதருக்குக் கோபம் வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அதற்காக அத்தனை கடுமையாக அவளிடம் நடந்துகொண்டிருக்க வேண்டாமே.

அந்தக் காட்சிகள் மீண்டும் மீண்டும் அவர் நினைவில் தோன்றிப் பழைய சம்பவங்களைக் கிளறிவிட்டன

“எப்போது உன் புகழை - முன்னேற்றத்தைக் கண்டு எனக்குப் பொறாமை ஏற்படலாம், நமக்குள் எண்ணங்கள் மாறும் என்று என்னைப்பற்றி எண்ணி விட்டாயோ இனி உன்னிடம் என் மனம் ஒட்டாது. நாம் இருவரும் சேர்ந்து வாழவும் முடியாது’ என்று சுந்தரியிடம் கோபித்துக் கொண்டு அவர் புறப்பட்டார். உடனே

நில்லுங்கள்! நீங்கள் புறப்பட்டுப் போவதை நான் தடை செய்யவில்லை . ஆனால் அதற்குள் நான் என் மனத்திலுள்ளதைக் கூறிவிடுகிறேன். அதன் பிறகு நீங்கள் விருப்பப்படியே போகலாம்’ என்று தடுத்துக் கூறிய அவளது சொற்கள் அவர் செவிகளில் அசரீரிபோல் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருந்தன.

சுந்தரி கூறினாள் : இன்று என் வாழ்க்கையில் மிகப் பெரிய குதுகலம் நிறைந்த மங்கள நாள் என்று நான் எண்ணி எண்ணி மகிழ்ந்துகொண்டிருந்தேன். இறுதியில் என் மகிழ்ச்சியெல்லாம் கனவாகவே ஆகிவிட்டது. இன்று மேடை ஏறிப் பாடும் போது கூட நான் எண்ணவில்லை; பாடி முடிந்ததும் இத்தனை பெரிய சூறாவளி என்னைச்