பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிந்தவர் கூடினர் 75

சூழ்ந்துகொள்ளும் என்று. பெறுதற்கரிய பேற்றைப் பெற்றுவிட்டதாகத்தான் மேடையில் பாடும் போது மகிழ்ந்து கொண்டிருந்தேன. ஆனால் நான் அநுபவித்த ஆனந்தம் மொட்டிலேயே கருகிமடிந்து விட்டது. கச்சேரி முடிந்து இரண்டு மணிநேரம் ஆகவில்லை என்னைக் கண்ணிரும் கம்பலையுமாகக் கதறக் கதற அடித்துவிட்டு நீங்கள் புறப்பட்டுச் செல்லத் தயாராகி விட்டீர்கள்.

உங்களைப் பொறாமைக்காரர் என்றோ, என் நல் வாழ்வில் அக்கறை இல்லாதவர் என்றோ நான் ஒருக்காலும் கூறவில்லை. நீங்கள் அப்படி எண்ணினால், அது நான் கூறிய வற்றைத் தவறாகப் புரிந்து கொண்டதாகவே ஆகும். கிடைத்தற்கரிய பேறாகிய தாங்களே என்னை ஆட்கொண்ட பின்; நான் கற்றுக் கொண்ட இசையையும் உங்களுக்கே சமர்ப்பித்து மகிழவே விரும்புகிறேன் என்றால் அது குற்றமா? இருவரும் தொழிலில் இறங்கி, நம்மில் ஏற்றத் தாழ்வுகளை எடைபோடும் பொறுப்பையும், விமரிசனம் செய்யும் சந்தர்ப்பத்தையும் ரசிகர்களுக்கு அளித்து மன ஆயாசத்திற்கு வகைசெய்ய வேண்டாமென்று கூறினால் அது தவறா? இந்த ஜென்மத்தில் உங்களையன்றி மற்றோர் ஆடவரை நான் மனந்தாலும் நினையேன். நீங்கள் எங்கிருந்: தாலும் உங்களுக்காகவே உங்கள் நினைவாகவே இங்கேயே இருந்து என் வாழ்நாளை ஒட்டிவிட என்னால் முடியும். இவ்வளவு தான் நான் கூற விரும்பியவை: இனி தங்கள் விருப்பம் போல் தாராளமாகச் செல்லலாம்’ என்று கூறியவள் பதிலுக்குக்கூட காத்திராமல் உள்ளே சென்று விட்ட காட்சி, திரைப்படம் போல் மீண்டும் ஒரு முறை அவரது இதயத் திரையில் ஒடி நின்றது.

அந்தக் காட்சியைக் காணச் சகிக்காதது போல் கண்கள் நீரை உமிழ்ந்தன. கோபந்தான் எத்தனைக் கொடியது: அது மனிதனை என்ன பாடு படுத்திவிடுகிறது?