பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயப் பெண். 83

காரியும் ஏறிக்கொண்டவுடன் பிடில் பஞ்சு அண்ணா வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டார். ஸ்டேஷன் வரைக்கும் அவர்களோடு துணைக்குச் சென்று டிக்கெட் வாங்கிக் கொடுத்துவிட்டுத் திரும்பினார். பாகவதரிடம் வந்து சுப்பராமா, நீ பூர்வஜன்மத்தில் நல்ல சங்கீதத்துக்காக மட்டும் பூவை எடுத்துப் போடவில்லை; லட்சுமியையும் சுந்தரியையும் போல இரண்டு பெரிய நிதிகளுக்காகவும் வாய்நிறைய அர்ச்சனை பண்ணியிருக்கிய்; அதெல்லாம் இந்த ஜன்மத்தில் பலிதமாகிறது’ என்று மனதாரக் கூறினார். சுப்பராம பாகவதருக்கும இதைக் கேட்க மகிழ்ச்சியாகவே இருந்தது.

பாகவதரும் பஞ்சு அண்ணாவும் நல்ல சிநேகிதர்கள், பழக்கம் காரணமாக அவர்கள் இருவரும் மிகவும் சகஇ மாகவும் வேடிக்கையாகவும் பேசுவார்கள். சங்கீத வித்து வான்களிடையே, அதிலும் குறிப்பாகப் பக்கவாத்தியக் காரர்களுள் பஞ்சு அண்ணாவுக்கு மிகவும் நல்ல பெயர். மேலும் அவர் நல்ல ஞானஸ்தர். பாட்டுக்கு அநுசரணை யாகப் பிடில் வாசிப்பதில்; மிகவும் பெயர் பெற்றவர். யாருடைய கச்சேரியில் பஞ்சு அண்ணா பிடில் வாசித் தாலும் கச்சேரி களை’ கட்டிவிடும்.

அரங்கேற்றத்துக்குப் பிறகு நடந்த விஷயங்கள் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் பஞ்சு அண்ணாவுக்குத் தெரிய வந்தன. திருவிடைமருதுாருக்கு ஏதோ வேலையாகச் சென்றார் எதேச்சையாக, சுந்தரியை பார்த்து நாளாயிற்றே” என்று வீட்டுக்குள் நுழைந்தவர் கற்சிலைபோல் பிரமித்து நின்றுவிட்டார். கல்லில் வடித்த சிலைபோல் இளமையழகு கொழித்துக்கொண்டிருந்த சுந்தரி உருக்குலைந்து மனநோயால் பீடிக்கப்பட்டு வைத்தியத்