பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்துரை

இசைக் கலை என்பது தெய்வீகத் தன்மை வாய்ந்த ஒரு கலை. பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு ; இறைவனைச் சரணடைய இசையால் ஆராதிப்பதைவிட ச் சிறந்ததும்; சுலபமானதுமான மார்க்கம் வேறில்லை. அதனாலேயே பக்தை மீரா, ஆண்டாள், சங்கீத மும்மூர்த்திகள் : நாயன்மார்கள் ஆகியோர் பக்தியால் உள்ள முருகி, இசையால் இறைவனைத் துதிபாடி உன்னத நிலை அடைந்தனர்.

பச்சிளங் குழந்தை முதல்-படமெடுத்து ஆடும் பாம்பு வரை இசை கேட்டு மயங்கும். கண்ணனின் குழலோசை கேட்டு, ஆயர் பாடியில் ஆநிறைகள் மெய். மறந்து நின்றதுண்டு.

நல்ல இசைக்கு இசைப் பவனையும், கேட்பவனையும் மெய்மறக்கச் செய்கிற அற்புத சக்தியுண்டு. இத்தகைய சிறப்புமிக்கதொரு இசை வல்லுனராக-சுவாமிமலை சுப்பராம பாகவதரும்; அவரால் உருவாக்கப்பட்ட சிஷ்யனான ஹரியும் இந்த நாவலில் திகழ்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஹரிக்குப் பெற்றோர் இட்ட பெயர் கண்ணப்பன் . “கியாஸ் லைட்’ தூக்கிப் பிழைக்கும் தொழில் செய்து வந்த ஏழை க் குடும்பத்தில் பிறந்து; பெற்றோரால் வீட்டை விட்டு அடித்துத் துரத்தப்பட்ட அவனை-அவனுடைய இசை யார்வம் கண்டு வலியச் சென்று சுவீகரித்து: “ஹரி என்னும் புதிய பெயர் சூட்டி வீட்டோடு ஆதரித்து, அவனுக்குத் தன் உயர்ந்த இசைக்கலையையும் போதித்து உயர் நிலைக்கு ஆளாக்குகிறார் பாகவதர்.

ஹரியோ