பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 புல்லின் இதழ்கள்

துக்கும்; வைத்தியர்களுக்கும் அப்பாற்பட்டுப் படுத்த படுக்கையாகக் கிடந்தாள்.

அழகின் அதிதேவதையே மண்டபத்தின் மத்தியில் கொலுவீற்றிருப்பதேபோல் அன்று அவள் கச்சேரி செய்த அழகைக் கண்டவர்; இன்று புழுதியில் உருட்டிவிடப்பட்ட வீணையைப் போல அவள் இருப்பதைக் கண்டு பதறிப் போனார்.

சுந்தரி பஞ்சுஅண்ணாவிடம், நடந்த விவரங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறிக் கண்ணிர் விட்டாள். கச்சேரி முடிந்து வீட்டுக்கு வந்ததும், குரு அது வரையில் இல்லாத புதுமாதிரியாகத் தன்னிடம் கேட்டகேள்வி யையும், அதைக் கேட்டுத் தான் அடைந்த அதிர்ச்சி யையும், அதற்குத் தான் விதித்த நிபந்தனையையும் கூறினாள். அதைக் கேட்டு அவர் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டு தன் வீட்டுப்பக்கம் திரும்பிக்கூடப் பாராமல் இந்த இரண்டு மூன்று மாதமாக இருப்பதையும்பாட்டி இறந்ததையும், தானும் இறக்கிறவரை அவர் அப்படி வராமலே இருந்தாலும் நான் அவருக்காகவே வாழ்ந்து அவர் நினைவுடனேயே இறப்பேன்’ என்றும் கூறிக் கொண்டு வரும்போதே தாங்க முடியாத துக்கத்தினால் சுந்தரியின் குரல் தழுதழுத்தது.

பஞ்சு அண்ணாவினால் அதற்கு மேலும் அந்த இடத் தில் நிற்க நிலைகொள்ளவில்லை. சுப்பராமனுக்கு இப்படி ஒரு சபலம் ஏற்பட்டிருக்க வேண்டாம். அதன் பிறகு அர்த்த மில்லாமல் வீம்புக்கு இப்படி ஒரு பெண்பாவத்தையும்

கொட்டிக் கொண்டிருக்க வேண்டாம். நான் நாளையே அவனைப் பார்த்து உனக்கு வேண்டியதைச் செய்கிறேன். நீ கொஞ்சங் கூடக் கவலைப்படாதே’ என்று ஆறுதல்

கூறிப் புறப்பட்டுவிட்டார்.