பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயப் பெண் 85

அதன் பிறகு அவர் சுப்பராமனிடம் வந்து மிகவும் கோபித்துக்கொண்டதுடன், சுந்தரியின் கவலைக்கிடமான உடல் நிலையையும் விளக்கி, உடனே சென்று பார்த்து வரும்படி தூண்டினார்.

அன்று பஞ்சு அண்ணா நல்ல உள்ளத்தோடு தம்மைத் துரண்டிவிடாமல் இருந்தால் அநியாயமாக ஒரு ஞான தீபம் கவனிப்பாரற்றுக் காற்றில் அணைந்து போயிருக்கும்: சுந்தரிக்கும் ஒரு வாழ்வு கிடைத்து தனக்கும் அவளிடம் இப்படி ஒர் அழகான பெண் குழந்தை பிறந்திருக்கமாட் டாள். அதைத் தான் சுப்பராமன் இப்போது எண்ணிப் பார்த்துக்கொண்டார்.

நாணாவைப் போன்றவர்கள் என்னைப் பற்றி எது வேண்டுமானாலும் அவதூறு பேசிவிட்டுப் போகட்டும். அதைப்பற்றி ஒன்றும் கவலையில்லை. கலை எப்படி மனித ஆட்சிக்கு கட்டுப்படாததோ ; அதைப் போலவேதான் அந்தக் கலையை ஆட்சி செய்யும் கலைஞனும், சாதாரண

மனிதர்களின் மனப்பான்மைக்கும் கட்டுப்பாட்டுக்கும் கட்டுப்படாமல், தனக்கென்று ஒரு வழியில் தன்னிச்சைப் படியே செல்லக்கூடியவன். அவனை யாராலும் புரிந்து

கொள்ள முடியாது; பணியவைக்கவும் முடியாது. இதுதான் கலைஞனின் வாழ்க்கை’ என்று தம் மனத்துக்குள்ளே சமா தானம் செய்துகொண்டவண்ணம் ஹரி’ என்று உரக்க அழைத்தார். இப்போது அவரது மனம் கட்டுப் பாட்டுக்குள் அடங்கியிருந்தது. விரல்கள் தந்தியை மீட்டின. எதிரொலி கேட்டுத் திரும்பினார். ஹரி தம்பூராவுடன் தன் இடத்தில் அடக்கமாக வந்து உட்கார்ந்திருந்தான். அவனுடைய முகத்தில் ஒடிக்கொண்டிருந்த கவலைக் கோடுகளை பாகவதர் கடைக்கண்ணால் லேசாகப் பார்த்துத் தெரிந்து கொண்டார்.