பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 புல்லின் இதழ்கள்

பாடங்களைச் சொல்லிக் கொடுத்து, பழைய பாடங்களைப் பற்றிய சந்தேகங்களை விளக்குவார். தமக்குப் பிற்காலத்தில் தம் பரம்பரையான சங்கீதத்தையும் பெயரையும் வழி வழியாகக் கொண்டு செல்ல; அவருக்கு அருமையான நிதியைப் போல் ஹரி கிடைத்துவிட்டான். இதை அவர் தம் குருவின் கடாட்சமாக, பூர்வஜன்ம புண்ணியாமாகக் கருதினார் ஹரியும், அதற்குத் தகுந்த பாத்திரம் என் தச் சகல விதத்திலும் நிரூபித்தான். தம்மிடம் பாடம் சொல்- க் கொள்ள வந்திருக்ரும் சிஷ்யர்களை வீட்டிலுள்ள யாரும் எந்த வேலைக்கும் ஏவக்கூடாது என்று அவர் கண்டிப்பாகச் சொல்லியிருந்தார். ஆனால் ஹரியே அந்தக் குடும்பத்தின் அத்தனை வேலைகளையும், பொறுப்புக்களையும் சிறுகச் சிறுகத் தானே மேற்கொண்டான். அதைக் கண்டு லட்சுமி யம்மாள் பூரித்துப் போனாள். இதயத்துக்குள்ளேயே அவனுக்கு ஆயிரமாயிரம் நல்லாகசிளை வழங்கினாள்.

இப்படி ஆதியிலிருந்தே வைரம்பாய்ந்திருந்த எண்ணத் தைத்தான் நாணா மாமா வந்து இரண்டு நாளில் ஒரு கலக் குக்கலக்கிப் பார்த்தார். கையை எடுத்தவுடன் நீர் மீண்டும் ஒன்று கூடிவிடுவதே போல், அண்ணா போனவுடனேயே அந்தச் சலனமும் அவள் மனத்தின்றும் மறைந்துவிட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் அறைக்குள் நுழைந்த ஹரி குருவின் காதருகில் வந்து, ‘வெளியூரிலிருந்து ஒர் அம்மாளும் பெண்ணும் காரில் வந்திருக்கிறார்கள்; உங்களைப் பார்க்க வேண்டுமாம்’ என்று பணிவோடு கூறினான்.

பாகவதர் ஒரு கணம் அவனை உற்றுப்பார்த்துக் கொண் டிருந்துவிட்டு எழுந்திருந்தார்.

- யார் வந்தால் என்ன? இதற்காகவா நீ பாதியில் எழுந்து போனாய்? என்னைப்பார்க்க வருகிறவர்கள் என்னைப் பார்க்காமலா போய்விடப் போகிறார்கள்?’. என்ற பொருள் அப்போது அவருடைய பார்வையில் தொனித்தது.