பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதவு திறந்தது 89

ஹரி மிகவும் பயந்து விட்டான். பதிலே பேசாமல் அவரைத் தொடர்ந்தான். ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த தாயும் மகளும் பாகவதரைக் கண்டதும் மிகுந்த பணிவுடன் எழுந்து வணக்கம் தெரிவித்தனர் அவரும் அவர்களைப் புன்சிரிப்புடன் வரவேற்ற வண்ணம் அருகிலுள்ள ஆசனத்தில் அமர்ந்தார். வாசலில் அவர்கள் வந்திருந்த நீல நிறக் கார் நின்றிருந்தது.

பாகவதரைப் பற்றி அந்த அம்மாள் தான் அறிந் திருந்த பெருமைகளைச் சிறிது நேரம் பேசி விட்டு, பிறகு தன்னைப் பற்றியும், தாங்கள் வந்த காரியத்தைப் பற்றியும் சுருக்கமாகக் கூறினாள்.

தஞ்சையைச் சேர்ந்த அந்த அம்மாளின் பெயர் கங்கா பாய். மராட்டியரான அந்த அம்மாளுடைய கணவர் பெரிய சர்க்கார் உத்தியோகம் பார்த்துச் சமீபத்தில் கால மானவர். பெரிய செல்வரான அவர்களுடைய ஒரேபெண் தான் அருகில் இருக்கும் காந்தாமணி.

கங்காபாய்க்கு, மகளைப் போலவே சங்கீதத்தில் அபார மோகம். ஆனால் அவளுக்கு கிட்டாத சாரீர பாக்கியத்தைப் பெண் அடைந்திருந்தாள். சிறந்த வித்து வானிடம் முறையோடு சங்கீதம் கற்றுக் கொண்டு பிரமாதமாகப் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்துட னேயே அவர்கள் வந்திருந்தனர்.

அத்துடன், கங்காபாய் “தனக்கு நாட்டியத்திலும் அளவு கடந்த ஆசையும், சிறிது பயிற்சியும் உண்டு என்று கூறி, இப்போது ஆடுவதை நிறுத்திப் பல வருஷங்கள் ஆகி விட்டன என்பதையும் கூறினாள்.

‘நல்ல வேளை நாட்டியம் பிழைத்தது’ என்று அந்த அம்மாளின் ஆகிருதியைப் பார்த்து, அருகிலிருந்த சுலோ மனத்துக்குள் சிரித்துக் கொண்டாள்.

பு. இ. - 6