பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதவு திறந்தது 91

--

எங்கோ என்ன? உங்கள் கச்சேரி தஞ்சாவூர் வட்டாரத்தில் எங்கே நடந்தாலும் கேட்கத் தவற மாட்டாள். ஒரு சபா பாக்கி இராது. அழைப்பில்லாத கல்யாண கச்சேரியாக இருந்தால் கூட வெட்கப்படாமல் போய் விடுவாள். கண்ணை மூடிக்கொண்டாலன்றி இவளை நீங்கள் கச்சேரியில் எப்படிப் பார்க்காமல் இருக்க முடியும்’ என்று கங்காபாய் கூறிக் கொண்டிருக்கும் போதே எல்லாருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

லட்சுமியம்மாள் அடுக்களை உள்ளேயிருந்து ஹரி’ என்று கூப்பிட்டாள், குருவுக்குப் பின்னால் நாற்காலியைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த ஹரி, உள்ளே சென்று மூன்று தம்ளர் காபியுடன் வந்தான்.

முறையே அதைக் கங்காபாயிடமும், காந்தாமணி யிடமும் வைத்து விட்டு மற்றொன்றை சுசீலாவின் எதிரில் வைத்தான்.

“நாங்கள் இப்போது வரும்போது தானே சாப்பிட்டு விட்டு வந்தோம்? அதற்குள் காபியா?’ என்று கங்கா பாய் கூறிய போதே, ‘அம்மா, எதிர்த்துப் பேசாமல் எடுத்துக் குடியம்மா’ என்று ஏதோகோயில் பிரசாதத்தை மறுப்பது போல் தாயை கண்டித்த காந்தாமணி சட்டென்று எழுந்து பாகவதரை நோக்கி, ஆமாம் உங்களுக்கு...?’ என்று பணிவோடு கேட்டாள். அப்போது அவளது பார்வை ஹரியின் பக்கம் சென்று மீண்டதைச் சுசீலாதான் கவனித்தாள்.

‘'நான் ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல் காபி குடிப்பதில்லை, நினைத்த போதெல்லாம் நிறையக் குடித்துக் கொண்டிருந்தவன்தான். இப்போது அதற்கு மேல் சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்வதில்ைை’ என்று பாகவதர் காந்தாமணிக்குச் சமாதானம் சொன்ன போது சுசீலா ஹரியைக் கூப்பிட்டாள்.