பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

முடியவில்லே...... உள்ளிருந்து வந்தாள் பாய் ந்து !

முடியவில்லை ! இவர்கதையும் கேள், கேள்; அண்ணு :

விடியவில்லை ; இருள்பிரியா நேரத் தில் நான்

வேறு நிஜனப் போடிருந்தேன், தவறு செய்தேன் !

மடியவில்லை மணமயக்கம் இவருக் கின்னும் மாதங்கள் மூன்ருசிக் கூட 1’ என்ருள்,

கொடியவில்லைப் புருவமாகக் கொண்ட தங்கம் ;

கூரம்பு விழியாலே குத்திக் கொன்ருள் !

மாட்டுக்குப் பருத்திவிதை ஊற வைத்து,

மறுபுறத்தில் இருக்கின்ற பழைய சோற்றைப்

போட்டுண்ணச் சொன்னதற்குப், பருத்திக் கொட்டை

பூராவும் தின் ருெ.ழித்த கார ணத்தைக்

கேட்டுச்சொல் மயக்கத்தின் விளைவு தானு ?

கிண்டலுக்குச் செய்தாரா, கிறுக்கா ? என்ருள் :

பாட்டுக்குத் தாளம்போல் புதுவாழ் வுக்குப்

பண்பிதுதான் 1’ என்றி.ட்டார் அன்பு மச்சான்,