பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 தலைப்புகளில் 213 எண்சீர் விருத்தக் கவிதைகளைக் கொண்ட இந் நூலுக்கு ஆசிரியர் ஏன் பூக்காடு என்ற பெயர் இட்டிருக்கிருர் என்று எளியேனுக்குப் புரியவில்லை. பூக்கள் அல்லது பூம்பொழில் என்ற பெயரே போதுமே. ஆனந்தம் கவிதைகளின் தனிச் சிறப்புகள் சில. அவற்றுள் தலேயாயது கவிதைகள் யாவும் சிறுகதைச் செய்யுள்களாகவே அமைந்துள்ள சிறப்பேயாகும். கதை தழுவிய கவிதைகள் கருத்தைக் கவ்வ வல்லன. இவ்வுண்மைக்கு இத்தொகுப்பே சிறந்த சான்று.

அடுத்த பெருஞ்சிறப்பாகக் கருதத்தக்கது, விடுதலே இயக்கம் விறு பெற்றிருந்த காலத்தில் பிறந்த கவிதைகளே ஆயினும் இந்திய விடுதலே இயக்கத்தின் நேரடித் தாக் குதல் எதுவுமே அற்றதாய், அவ்வியக்கத்தின் உள்ளார்ந்த குறிக்கோளும் தொலைவுப் பயனுமே ஆகிய சமூகச் சீர்திருத் தத்தின் எழுச்சியே நிறைந்துள்ளமையாகும்.

இந்த வகையில் கவிஞர் ஆனந்தம் அவர்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதைப் பொய்கையில் ஆத்த புத்தெழில் மலர்களுள் தனிச்சிறப்பு வாய்ந்த சீர்திருத்தச் செம்மலர் என்றே செப்பலாம்............

பரிசு பெற்ற இவருடைய கவிதை நூலுள் ஒரு கவிதைக்கு மட்டுமே என்னே முதற்பரிசு கொடுக்கும்படிக் கேட்டால் (என்னே யாரும் கேட்க மாட்டார்கள் 1) இந்த நூலுள் இரண்டாவது கவிதையாக இடம் பெற்றுள்ள கட்டாத முத்தாரத் தையே காட்டுவேன். இக் கவிதை மிகமிகச் சிறந்த கவிதை. ஆசிரியரின் ஆளுமையை அப்படியே உரித்துக் கொண்டு பிறந் திருக்கும் கவிதைக் குழந்தை இது. கட்டாத முத்தாரம் என்ற இக் கவிதையின் தலைப்பே இந்நூலுக்கும் தலைப்பாக அமைந்து இருந்தால் நன்ருக இருக்கும் என்பது என் கருத்து.

டாக்டர் க. சஞ்சீவி

தமிழ் உறவு 15-7-72