பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு தந்தவரே : கவிதைக் காகப்

புதுப்பரிசு பெற்றவரே ! சமுதா யத்தை

நோக்காட்டில் தள்ளுகின்ற பழமை தன்னே

நொறுக்கிவரும் தஞ்சாவூர்க் கவியே : இங்கே

நீர்க்குடங்கள் நடுவினிலே வைக்கப் பெற்ற

நெய்க் குடத்தைப் போன்றவரே ! உம்மை நாங்கள்

வே ரி.ப் பலாவின் ச2ளயென்று கருது கின்ருேம் !

மேலான தமிழில்பா ராட்டு கின்ருேம் !

பகுதியெலாம் சொற்களுக்குத் தக்லமை தாங்கும்

பழங்களெலாம் விதைகளுக்குத் தலைமை தாங்கும்

தகுதியெலாம் திறமைக்குத் தலைமை தாங்கும்

தந்தங்கள் பற்களுக்குத் தலைமை தாங்கும்

மிகுதியெலாம் நீரானுல், கடலாய்த் தோன்றும்

மிச்சமெலாம் அறிவானுல், புகழாய்த் தோன்றும்

விகுதியென நிற்காமல் பகுதி போன்று

விளங்குகின்றீர் ; ஆதலினுல் போற்று கின்ருேம்.

  • ~ * - உவகை க:து சுர தா.