பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

சம்மதம்போல் மூத்தவனும் தலையை ஆட்டிச்

சாய்த்திருத்த முதிய வரைப் படுக்க வைக்க...

திம்மதியாய் வாழ் நாளை முடித்துக் கொண்டார் !

தி8லயாமை உலகத்தின் இயற்கை யன்ருே ?

எம்முதலும் இல்லாமல் வணிகஞ் செய்யும்

ஏமாற்றுக் காரரையே அழைக்க வில்லை ;

விம்மூதற்கும் விழி நீரைச் சிந்து தற்கும்

விருத்தினராய் வந்தவரும் திரும்பிச் சென்ருர்.

அண்ணனுக்கு மனையாளாய் வாய்த்த தையல்

அருங்குணங்கள் திரண்டபெரும் உருவாய் வந்தாள் ;

உண்ணு கையில் காக்கைவந்தால் எச்சில் கையை

ஒழுங்காக தக்கி விட்டே ஓட்டப் போவாள் !

எண்ணமெலாந் தானுந்தன் கணவர், மக்கள்

இன்பமுடன் வாழ்வதுதான் ! மாற்ரு ருக்குக்

கண்ணுென்று யோவதெனில் தனதி ரண்டு

கண்களையுத் தர இசையுந் தியாக உள்ளrம் !