பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மங்களத்தின் வாழ்க்கையிலே குறைவே யில்&ல ;

மனம் நிறைந்த கணவரொடும், மக்க ளோடும்

சங்கடங்கள் ஏதுமின்றி அறு.ய தாண்டைத்

தாண்டிவிட்ட தருணத்தில்-ஒருதுநாள் மரலே

எங்கிருந்தோ வந்தவொரு பாழும் நோயால்,

இதுகாறும் இ8ண பிரியாத் துஆனவர் மாளக்

குங்குமம் பூ, மஞ்சளுடன் தாலி, மற்றும்

குதுரகலமும், புன்சிரிப்பும் ய ரிகொ டுத்தாள்

ஆங்காங்கே அலுவலிலே அமர்த்தி ருந்த

ஆண்மக்கள் ஐவரும் இச் செய்தி கேட்டுத்

தாங்காத துயரத்தால் துடித்த வர்போல் தத்தமது மனைவி மக்கள் சுற்றம் குழு,

நீங்காமல் உடனிருந்து கடன்கள் ஆற்றி

நியமங்கள் தவருது முடித்து வைத்தார் !

பரங்கான உணவுண்டு நான்காம் நாளின்

பகற்பொழுதில் சிட்டாட்டம் ஆடிக் கொண்டே...

17