பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரறிஞர் அண்ணு அவர்களின் தூண்டுதலால் பூக்காடு முதல் பதிப்பினே 1966-ம் ஆண்டில் வெளியிட்டேன். முத்தாரம்’ இதழிலும், பொங்கல் மலர்களிலும் அவ்வப்பொழுது என்னல் எழுதப் பெற்ற கவிதைகளில் சிலவற்றைத்தான் திரட்ட முடிந்தது.

தொகுத்து நூலாக்கிடப் பணித்ததோடன்றி இதன் விற்பனையிலும் அக்கறை செலுத்தினர் அண்ணு. பூக்காடு’ என்று பெயர் சூட்டி, பல்வகையிலும் ஆக்கமளித்தார் கலைஞர், முதற் பதிப்புக்கு அவர்கள் அளித்த பாராட்டு மொழிகளே இரண்டாம் பதிப்பிலும் வெளியிட்டு மகிழ்கிறேன்.

இடைக்காலத்தில் இந்த நூல் தமிழக அரசின் பரிசினையும் பெற்றுள்ளது. ஒய். எம். சி. ஏ. பட்டிமன்றம் 1-7-71 அன்று அதற்கென ஒரு பாராட்டு விழாவும் எடுத்து, என்னைச் சிறப்பித்தது. பாராட்டியோரும் விழா நடத்தியோரும் என் அன்புக்குரியவர்களாகிருச்கள். பரிசுத்தொகை தான ஆயிரம் ரூபாயை அண்ணு அறக்கட்டளை நிதியில் சேர்த்துவிட்டேன்.

ஏற்ற ஓவியங்ககாத் தீட்டி உதவிய அருமை நண்பர்கள் (சினி) சோமு, முத்து ஆகியோருக்கும், அச்சியற்றி உதவிய தாயகம் அச்சகத் தார்க்கும், நண்பர் நரசிம்மனுக்கும் நன்றி.

தமிழகம் இந்த இரண்டாம் பதிப்பினை விரைந்து வரவேற்கும் என்ற தம்பிக்கையுண்டு.

வணக்கம்,

அன்புள்ள

ஆனந்தம்