பக்கம்:பூங்கொடி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

45

50

60

சுவடியின் மரபு தெரிவுறு காதை

அந்நூல் தமிழுக் கிலேயென் றறைதல் அளப்பே யாகும் அவ்வுரை நம்பேல் அளப்பரும் புகழ்நூல் சிலப்பதி கார உரைசரும் ஆசான் அடியார்க்கு நல்லான் புரைபற உரைத்தது புலமுளோர் அறிவர் ;

பழந்தமிழ் இசைகள்

யாழும் குழலும் எழுப்பிய இசைகான் வாழும் தமிழோ? வருமொழி இசையோ ? அவ்விசைக் கருவிகள் ஆய்ந்து கண்டவர் செவ்விய தமிழர் ; சிறந்த இக் கருவிகள் எப்பொருட் டியற்றினர் இசைப்பொருட் டன்றாே? பாணன் பாடினி பாடற் ருெழிலோர் மேனுள் ஈண்டு மேம்பட வாழ்ந்தனர்;

அவர்காம்

எம்மொழிப் பாடல் இசைக்தனர் ஆய்ந்துணர் ! திணைகள் ஐந்தெனச் செப்பிய முன்னேர் இணையும் வகையால் பண்ணும் இசைத்தனர் : இவைஎலாம் மறந்தே இலைஎனல் முறையோ?

மீனவன் கலங்கல்

ஆதலின் நம்பால் அனைத்தும் இருந்தன ; ஏதிலர் நம்மை இகழ்ந்துரை யாட நோதகச் சிலபல தீதுற் றழிக்கன : அந்தோ உலக அாங்குக் கொளிசெயும் நந்தா விளக்கே ! நாமிசைப் பாவாய் ! மண்ணக முதல்வி எண்ணுகர் தலைவி ! கண்ணுவ தேனே நலிவுகள் நினக்கெனக் கண்கலங்கி நெஞ்சம் புண்ணடைந் திருப்ப,

85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/104&oldid=665579" இலிருந்து மீள்விக்கப்பட்டது