பக்கம்:பூங்கொடி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

120

125

180

135

வடபுலத்திசை பயில்க எனல்

என்னிசைப் பயிற்சியும் எளிதாய் நினக்கு வருமா றுரைக்க மனங்கொண் டுன்பால் வருதல் உற்றேன் ; வடபுலத் திசையும் ஒருங்குடன் சேரின் ஒளிரும் நின்புகழ் ; அருங்குணம் ஆன்றாேப் விரும்புதி யோ என,

மீனவன் ஏளனம்

வயிறுபுண் கை வாய்விட்டுச் சிரித்துக்

குயிலின் குரலொடு கோழியின் குரலும் இணையின் என்னும்? இந்நாள் வரையும் துணை விழி மூடித் தாங்கிய மாங்கர் கண்விழிக் கெழுந்து கருத்துடன் தமிழிசைப் பண்தொடுத் திசைக்கப் பயிலுங் காலை மீட்டும் மற்றாேர் இசைபுக விழையின் காட்டும் ஆர்வம் கருகிச் சாகும் ; அரும்பிய ஆர்வம் அனிமல ராகி விரிந்து நறுமணம் வீசுதல் ஒன்றே என்குறிக் கோள்’ என எடுத்துரைத் தனனே :

தங்கத் தேவனிடம் ஏமகானன் முறையிடல்

மின்பொறித் தாக்குதல் மெய்யும் முன்போல் பின்புறம் நோக்கிலன் பேசா நாவினன் ஏகினன் வடபுல ஏம கானன் ; போகிய அவ்விசைப் புலவன் கானுறை தங்கத் தேவன் கன்மனே குறுகிச் * சிங்கம் என்னேயிச் சிறியோன் பழித்தனன் ; என்னிசை இகழ்ந்து கன்னிசை புகழ்ந்தனன் ; நின்னுரை கேட்டேன் நெளிந்ததென் மானம் ! எந்நகர்ச் செலினும் எற்பணிக் கேற்றனர் ;

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/107&oldid=665582" இலிருந்து மீள்விக்கப்பட்டது