பக்கம்:பூங்கொடி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

195

200

205

சுவடியின் மரபு தெரிவுறு காதை

சொற்பகை கொள்ளத் துணிந்தனன், கின்னேச் சிங்கத் தேவனெனச் செப்பக் கேட்டுளேன் தங்கத் தேவ தயங்கேல் வினைமுடி எனமுடி போட்டவன் ஏகினன் , இப்பால்

மீனவன், பகைக்கு இரையாதல்

ஊர்கொறும் ஊர்தொறும் உழைத்துவரு மீனவன் பேர்மிகப் பெற்றனன் , பின்பொரு நகரில் காரிருள் இரவிடைக் கண்ணயர்க் திருந்துழி, குரியுட் கையினர் துணிமறை முகத்தினர் ஈரிரு மாக்கள் இருள்கிறை மனத்தினர் மானவன் மீனவன் மார்பிடை அங்தோ ! ஈனவர் செயலினே எவ்வனம் இயம்புவல் !

ஆவி பிரிதல்

குருதிக் காட்டிற் குப்புறக் கிடந்தவன் பெறலருஞ் சுவடியைப் பேணிக் கலைமகள் நிலையஞ் சேர்க்கப் பணித்தபின் நெட்டுயிர் கலைமலி தமிழுக் காக்கிக் களித்தனன் ;

அடிகள் இசை பரப்பப் பணித்தல்

அப்பெருஞ் சுவடி, ஆயிழை கல்லாய் ! தப்பரும் வீரன் தன்கையில் வாளென கின்பால் உற்றது : நீஇதைப் பரப்பி அன்பால் வெல் கென அடிகள் நவில கன்றெனப் புகன்று கங்கைஏ கினளே. (205)


91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/110&oldid=665585" இலிருந்து மீள்விக்கப்பட்டது