பக்கம்:பூங்கொடி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

15

20

25

30

35

பட்டுனர் அறிவும், பாங்குடன் குழைத்து மட்டவிழ் கோதை மனங்கொள ஒதினள்,

இசைக்கருவிப் பயிற்சி

குழலும் யாழும் முழவும் முதலாப் பழகும் கருவியின் பான்மையும் பயிற்றினள், மீனவன் சுவடியின் மேம்படு பொருளெலாம் ஞானமீ தார நாள் பல ஆய்ந்து குறைவறத் தெருட்டினள் கொடுமுடி கங்கை;

எழிலியின் உள்ளக்களிப்பு

கிறைவுறும் அறிவொடு கேரிய நடையுறும் இளையாள் திறமெலாம் எழிலி நன்குணர்க் திவளால் இசைத்தமிழ் இசையுறல் திண்ணம் ; தவலரும் இப்பணி தரணியில் ஆற்றிட என்பின் ஒருவரும் இலரே எண்மனம் துன்பின் ஆழ்ந்து துவளுங் காலே அந்நலி வகற்றிட ஆயிழை வந்தனள் ; என்னினும் மேம்பட ஏற்றமுற் றிலங்குவள், பைந்தமிழ் இசைத்தொழில் பரம்பரை அரு.அது பைந்தொடி நெடுநாள் வாழிய பெரிதென நெஞ்சொடு வாழ்த்தி நெடிதுவக் கண்ளே .

பூங்கொடி இசையரங்கேறுதல்

பாவை ஏறிய பாட்டாங் கனத்தும் நாவை மீறிய கற்புகழ் எய்தினள் ; கேட்டார்ப் பிணித்துக் கேளார் தாமும் வேட்ப இசைக்கும் வியத்தகு குரலும், பொருளொடு புணர்த்துப் புக்தியிற் படியத்

108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/127&oldid=665603" இலிருந்து மீள்விக்கப்பட்டது