பக்கம்:பூங்கொடி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

60

65

70

75

80

முழுக்கப் பொருளும் முடித்தவர் அல்லர், பழுதிலா அணியும் படித்தவர் அல்லர், ஐவகை இலக்கணம் அனைத்தும் இன்றிச் செய்யுள் எழுதி உய்வோர் பலரே !

தமிழைப் பழிக்க விடுவதோ!

இவர்தம் பாடல் எழிலுற அச்சுச் சுவடி வடிவில் சுற்றுதல் கண்டோம் விடுத்த இச் சுவடிகள் அடுத்திவண் வருமவர் படித்தவர் விழியிற் படுமேல் நம்மைப் பழிப்பவர் ஆவர் ; பைந்தமிழ் வளர்ச்சி இழித்துரை கூறுமா றிருக்கதே என்பர் : செழித்துயர் தமிழைப் பழித்திட நாமே விடுத்திடல் கன்றாே விளம்புதி மகளே ! கிலைத்திடுங் கவிதை கொடுத்திடுங் காப்பியம் விளேத்திடல் வேண்டும் பலப்பல இன்றே, அருமைத் தமிழ்க்கிஃ தாக்கப் பணியாம், தரும்கமைத் தலைமுறை தலைமுறை வாழ்த்தும் ;

போலிக் கவிதைகள்

போலிக் கவிஞர் புனைபவை புனேக ! வேலி யிடினும் விளைபவை விளையும் ; பயனும் பண்பும் பழுகிய நூல்கள் வியனுற வெளிவர முயலுதல் வேண்டும் ; புதியகம் சுவடிமுன் போலிச் சுவடிகள் கதிரோன் முன்னர்க் கைவிளக் காகும் ;

நாளைய உலகம் சந்தமிழ் ஏத்தும் ;

110

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/129&oldid=665605" இலிருந்து மீள்விக்கப்பட்டது