பக்கம்:பூங்கொடி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

15

20

25

30

35

நெஞ்சம் குளிர்ந்து நேரிழை வாழ்த்தி * வஞ்சி ! தமிழிசை வளர்வான் வேண்டி கிலேயம் ஒன்று நிறுவுதல் விழைந்தனென் , பலரும் வந்திவண் பயிலிகள் ஆவர்; இசைகெழு தமிழின் ஏற்றம் உணர்வோர் திசைதொறும் திசைதொறும் சென்றிசை பரப்புவர்; கொள்கை சழி இய நல்லிசைப் பாடல் உள்ளங் கவர்வன தெள்ளிகின் யாக்கும் நற்றிறல் உடையாய் கங்கைநீ யாதலின் சொற்றமிழ்க் கொள்கை முற்றவும் தொகுத்துப் பகுத்தறி ஆட்டும் பாடல்கள் புனேத்து வகுத்தவை பயிற்றின் வந்திவண் பயில்வோர் நாடெலாம் பரப்புவர் நம்முயர் கொள்கை

இசையின் இருபயன்

ஈடிலா இப்பணி இருபயன் விளக்கும் , பகைவர் மறைத்த பழந்தமிழ் இசைத்திறன் பகலவன் கதிரொளி பரவுதல் போலப் புத்துயிர் பெற்றுப் புவிமிசை யாங்கணும் மெத்தவும் பரவி மேம்படும் ; அகன்றலே விளக்கொளி இன்றி வீங்கிருள் மூழ்கித் துளக்குறும் மாந்தர் கிகர்க்கன ராகி உளத்தொளி யின்றி ஓங்கிருட் கிடந்து நொந்திடும் மாந்தர் உய்ந்திட யாண்டும் சிந்தனைச் சுடரொளி வளர்ந்திடும் அன்றாே?” என்றன ராக இயைந்தனள் பூங்கொடி ;

தமிழிசைப் பள்ளி

நன்றுளங் கொண்ட குன்றுறை படிகள்

40 இமிழ்கடல் வரைப்பில் தமிழிசை கூட்டும்

114

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/133&oldid=665610" இலிருந்து மீள்விக்கப்பட்டது