பக்கம்:பூங்கொடி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

115

120

125

130

135

அலரும் மலரும் அடருங் கடறும் பலவும் குலவி நிலவும் மாமலைக் காட்சியும் மாட்சியும், கடும்புனல் அருவியின் வீழ்ச்சியும் கண்டவை வாழ்த்தினென் வாழ்த்தினென் சென்மலைச் சிறப்பினைச் செப்புதல் எளிதோ? கன்மலைக் காப்பியம் யாத்திட முனையின் பொதியம் ஒன்றே போதும் தோழி!

அருவிக் காட்சி புலியருவி

போர்ப்பறை சாற்றிடும் ஆர்ப்பொலி என்ன வேர்க்குலம் பேர்த்து வீறும் ருர்த்துக் கல்பொரு கிறங்கும் மல்லலம் அருவிகள் நல்லன பலவும் ஈயந்தினி சாடினேன்; கண்டார் வியந்திடக் கைபுனேங் தியற்றிய தண்டாது பாயும் தண்புலி பருவியில் கொண்டான் தன்னெடுங் கூடி யாடினேன்;

பேரருவி

பொங்குமா கடலெனப் பொங்கிட விழ்ந்து தங்கா கிழிகரும் விரிபே ரருவியில் கங்குலும் பகலும் கணவனும் யானும் ஆடியும் ஒடியும் ஆர்த்தும் ஈகைத்தும் பாடியும் கூடியும் பன்முறை ஆடினுேம் ;

சண்பக அருவி

தண்முகை அவிழும் சண்பக அடவி எண்ணரும் மலர்களே இறைத்திட வாரித் தடகட ஒலியொடு தாவி இறங்கிப்

118

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/137&oldid=665614" இலிருந்து மீள்விக்கப்பட்டது