பக்கம்:பூங்கொடி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

160

165

170

175

180

ஐந்தருவி செந்தமிழ் ஒன்றே தெலுங்குடன் கன்னடம் சந்தம் மிகுமலை யாளம் துளுவென வந்தது போல வாய்ந்த ஒர் அருவி ஐந்து கிளையாய் ஐந்தருவி என்னத் தவழ்ந்திடல் கண்டு கனித்தனி அவற்றிற் சிவக்திட விழிகள் சிலபொழு தாடினம் ;

மாலைக் காட்சி

இங்ஙனம் இனிமையில் இருந்துழி ஒருநாள் பொங்குமா கடலெனப் பொங்குபே ரருவியில் துங்கரீ ராடித் துணையுடன் கூடிக் குறும்பலா வடியில் இருந்தனென் ; ஆங்கண் செங்கதிர் மேலைத் திசையினில் மறைய மாலைக் காதலன், மண்மகள் போர்த்த சீலை யாகிய செழுமிள நாற்றினே வாலைக் குறும்பென வளரிளங் தென்றற் கைகொடு வருடி அலைத்திடல் கண்டும், கடுவனும் மந்தியும் கனிவகை கொடுத்துத் தொடுவதும் விடுவதும் தொடர்ந்துடன் ஒடிக் கிளைகொறும் காவித் திரிவது கண்டும், மென்சிற கொலியால் வீணையின் இசைத்து நன்மணம் பரப்பும் பன்னிற மலர்தொறும் நறவம் மாந்திடும் வண்டினம் கண்டும், பறந்தும் இருந்தும் பாடும் புள்ளினம் விருந்கெனச் செவிவிழிக் கிருந்தன கண்டும், ஈகைத்துரை யாடிக் களித்தவண் இருக்கத்

120

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/139&oldid=665616" இலிருந்து மீள்விக்கப்பட்டது