பக்கம்:பூங்கொடி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

45

50

55

60

65

பழகும் மொழியோ பழச்சுவை மானும், துளிர்த்தும் தளிர்த்தும் தாமலர் பூத்தும் கிளேக்கும் மரங்கழிஇ மணக்கும் பூங்கொடி, விழியின் மலர்ச்சியை வியந்துரை யாடஒர் மொழியும் உளகோ முகமொரு முழுநிலா, நடைக்கும் இடைக்கும் நல்லதோர் உவமை படைக்கும் ஆற்றல் பாவல புலவர்க்கும் அரிகினும் அரிதே ! ஆயிழை நீயும் தெரிகுவை அந்தக் கெரிவையின் நலமெலாம், மூக்கும் விழியும் நோக்குநர் உளத்தைக் தாக்கும் இயல்பின, தககக ஒளியின, வார்த்தபொற் சிலைகொல் வடியாச் சிலைகொல் ! பார்த்தவர் இவ்வணம் மயங்குவர் பைங்கொடீ !

பருவம் பாழ்படுவதா?

சிறியவள் இல்லறச் செந்நெறிப் படாஅது

பருவமும் உருவமும் பாழ்படப் புறநெறி கருதின ளாகிக் கழிவது முறையோ?

கேடருங் குறிஞ்சித் தேனினேப் பாழ்செயும் மூடரும் உளரோ முக்கனி யாகிய தேமாங் கனியும் , தீஞ்சுவைப் பலவும், கொழுங்குலே வாழைச் செழுங்கனி யதுவும் அழுங்கல் எய்திட விழுந்து புழுதியில் ருைந்து சிதைவதில் நன்மையும் உளதோ? ஐந்து பொறியிவள் அடக்கவும் வல்லளோ ?

கடப்பருங் காமம்

இல்லறத் திருந்துகல் லின் பங் துப்த்தபின் நல்லஇவ் வுலகினை நஞ்சென வெறுத்துச்

128

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/147&oldid=665625" இலிருந்து மீள்விக்கப்பட்டது