பக்கம்:பூங்கொடி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

250

255

260

265

கோமகன் பூங்கொடியைச் சார்தல்

வஞ்சி உரைத்தவை செஞ்சொல் எனக்கொண்டு எஞ்சாச் செல்வன் எளிமைய னகி வேங்கை நகரில் பூங்கொடி தன்பால் தேங்கிய ஆர்வலன் சேர்ந்தனன், ஒருநாள் தமியள் தானே மின்றவள் முன்னர்க் குறுகினன் சென்று கூர்விழி நல்லாப்! ஒருமொழி நின்பால் உரைத்திட விழைந்தேன்;

திருமணங் கொள்கெனச் செப்பல்

சிறியவள் நீகான் திருமணம் பெரு.அது துறவுளம் கொண்டு குறளகம் புக்க காரணம் என்கொல் கடிமணம் கொள்ள ஆசனங் குன்னே அகத்தினில் நிறுத்தி நாடொறும் தொழுஉம் ஆடவர் உளரெனச் சேடிய ரேனும் செப்பிலர் கொல்லோ? வாடிய இளங்கொடி வாழ்வை வெறுத்தது முறையன் றெனினும் உரிமைஎன் முகும் ஆயினும் பிறராம் ஆடவர் தம்மை

ஆயுள் முழுதும் அனலிடைப் புழுவென வியுறச் செய்வது வேல்விழி முறையோ? சேயிழை என்மொழி சினவா திதுகேள்! கன்னியர் என்போர் காதலை மதிக்க முன்னுதல் வேண்டும் முரணின ராயின் பெண்மைக் கிழுக்கெனப் பேசுமிவ் வுலகம்

எண்ணித் துணிக’ என்றனன் கோமகன்;

136

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/155&oldid=665634" இலிருந்து மீள்விக்கப்பட்டது