பக்கம்:பூங்கொடி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

275

280

285

290

கோமகன் மீண்டும் தோன்றிய காதை

பூங்கொடியின் மறுமொழி

பூங்கொடி அவன்மனம் புரிந்தன ளாகி விங்கிய மனத்து விறலோய் கேண்மோ! மலர்தொறும் நன்மணம் மற்றவர் செயற்கையால் நிலவுதல் இல்லை இயற்கையின் நிலைமை ; திருமண கினேவும் செயற்கையில் தோன்றி வருவதும் இல்லை, மனத்தின் இயற்கை; இல்லறம் ஒருபெரும் நல்லறம் இதனே அல்லறம் எனநான் அயர்த்தும் புகலேன் ; தனிமை வாழ்வினும் துணையுடன் வாழ்வதே இனிமை எனப்புவி இயம்பக் கேட்டுளேன் , ஆயினும் பொதுப்பணி ஆற்றுவோர் சிற்சிலர் தோயுமிவ் வின்பம் துறப்பது மேலென ஆயும் புலத்தால் அறிந்துளேன். எனினும் காவியும் மணியும் கடுவிலங் குரியும் பூவிரி கானும் பூண்டேன் அல்லேன், உள்ளக் கெழுஉம் உணர்ச்சிகள் அடக்கி உள்ளம் துறந்தேன் உலகம் துறந்திலேன், எள்ளத் தனையும் எழுச்சியில் விழாஅது தெள்ளத் தெளிந்து திருமணம் ஒரீஇ இனமும் மொழியும் ஏற்றமுற் ருேங்க மனம்வைத் துழைத்திட வாழ்வு கொடுத்துளேன், அருளறம் பூண்டது குறளகம், ஆதலின் தெருளும் அனேயொடு சேர்ந்தவண் உறைவேன் ;

ஒருதலைக் காமம்

கிறைஎனப் படுவது இருதிறக் கார்க்கும்

பொதுவென கினேயாப் புன்மனம் காங்கி ஆடவர் திரியின் யானென் செய்வல்?

137

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/156&oldid=665635" இலிருந்து மீள்விக்கப்பட்டது