பக்கம்:பூங்கொடி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடல் நகரில் மீனவன் பணிபுரிந்து வருங்கால், அங்கிருந்த தமிழ்ச் சங்கத்தில் இசைச் சுவடியொன்று கி ைட க் க ப் பெற்றான். அதன் துணை கொண்டு இசை பரப்பும் நாளில், வமகானன் என்னும் வடபுலத்திசை வல்லான், கங்கத்தேவன் ஆவலால் மீனவனிடம் வந்து, வடநாட்டிசை பயிலச்சொன்னன். மீனவன் மறுத்து எள்ளி கையாடி அனுப்பிவிட்டான். வெட் கித் திரும்பிய எமகானன். அாண்டுதலால் சீற்றங் கொண்ட தங்கத்தேவன் மீனவனக் கொலே .ெ ச. ப்ய முயன்றான். அத் தீமையிற் றப்பிப் பிழைத்த மீனவன், கூடலே விட்டு வேறிடஞ் சார்ந்தனன். எனினும் கொடியோன் ஏவத் தியோர் சில்ர் அவனேக் கொலே செய்து விட்ட்னர். அவன் இறக்கும் பொழுது இசைச் சுவடியைக் கலைமகள் கிலேயத்திற் சேர்க்கும்ாறு பனிக் கனன். அச்சுவடி பூங்கொடி யாகிய நின்பால் வந்துற்றது. இகன் துனேயால் மீண்டும் இசைப்பணி புரிக’ என அடிகள் உரைத்துச் சென்றனர்.

அருண்மொழியும் இசைவு கந்து, இசைச் சுவடியின் விளக்கத்தை எழிலி என்னும் பாதரசியிட்ம் சென்று பெறு மாறு பணிக்கனள். பூங்கொடி, எழிலியின் வரலாறறிய விழைங்கனள். அடிகளும் கூறுவாராயினர் : கொடுமுடியில் பிறந்த எழிலி இசைக் துறையில் ஒப்புயர்வின்றி விளங்கினுள். ஆப்பொழுது புகழ்பெற்ற கூக்கன் ஒருவனேக் கலப்பு மனம் செய்து கொண்டாள். ஒரு சமயம் கூத்தின் பொருட்டு அயல் காடு சென்று திரும்பும் பொழுது, புயலால் மரக்கலம் உடைய, அருகில் இருந்த ஒரு தீவை அவ்ன் அடைந்தான். தப்பிப் பிழைத்த சிலர், கூத்தின் இறங்கானென்று எழிலியிடம் கூற, அளவிலாத் துன்பம் அடைந்திருந்தாள். தீவினுள் நுழைந்த கூத்தன் அக்திவின் கலைவ்ன்பால் கன் திறன்ம காட்டிப் பரிசில் பல பெற்று ஊர் திரும்பினன். திரும்பிய அவனைக் கண்டு எழிலி அளவிலா உவகை எய்தினஸ் அப்பெருமாட்டியிடம் இச்சுவடியிற் சொல்லிய செய்திகளைத் தெரிந்து கொள்க:

என்றனர்.

பூங்கொடி ஏழிலிபாற் சென்று இசை நுணுக்கம் பயின்று யாப்பிலக்கணமும் தெளிந்து, இரு துறையிலும் வல்லவளாக விளங்கிள்ை. இது கண்டு மகிழ்ந்த அடிகளார் இசைப்பள்ளி ஒன்றனே கிறுவிப் பயிற்றும் பொறுப்பைப் பூங்கொடிபால் ஒப்படைத்தனர். இப்பணி நடைபெற்று வருங்கால் சண்டிலி

என்னும் வடபுலத்துப் பெண்ணுெருக்தி இசை பயில வந்தனள்.

XIII

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/16&oldid=665639" இலிருந்து மீள்விக்கப்பட்டது