பக்கம்:பூங்கொடி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

120

130

140

மருள்படச் செய்யும் மனங்கவர் சித்திர விதானப் பரப்பொடு விளங்குகல் மண்டபத்து

ஆடல் அரங்கு

கண்ணுள் வினைஞர் கைத்திறத் தியற்றிய வண்ண ஒவியம் வகைவகை துலங்கும் எண்ணருங் திறத்த எழினிகள் காலப் பின்னரும் முன்னரும் பேரொளி காலும் பன்னிற விளக்கம் பாங்குற விளங்கக் கற்பனை தோற்கக் கண்கவர் முறையில் பொற்புடன் அமைத்த பொன்னிற அரங்கில் ஆடற் கூத்தும், அவிநயக் கூத்தும், நாடகக் கூத்தும், கல்லிசைப் பாட்டும் கண்டுங் கேட்டுங் களிப்பினில் திளைத்துத் திண்டும் அணையும் சேர்தரும் அமளியில் விலைபெறு பட்டும் விரிமலர் இகழும் குலவிட அதன்மிசைக் கொற்றவன் என்ன எழில்பெற இருக்கும் பெருகிலக் கிழார்முன் தொழுதவண் வங்கோர் சொற்றனர் சிலசொல் :

வந்தவர் செய்தி கூறல்

இசையும் கூத்தும் கசையுடன் பேணும் வசையிலாப் பெரும வாழ்ககின் உள்ளம் ! தமிழகச் செல்வி, தண்டமிழ்ப் புலத்தி, அமிழ்கெனும் இசையில் அளப்பருங் திறத்தி, தொண்டுளம் பூண்டவள், தோகை அவள்முகம் கண்டவர் கொழுதிடும் கருணை நிறைந்தவள், புண்ணியத் திருவினள், பூங்கொடிப் பெயரினள், கண்ணிஇத் திருநகர் நயத்திடும் வகையால்

144

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/163&oldid=665643" இலிருந்து மீள்விக்கப்பட்டது