பக்கம்:பூங்கொடி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

170

175

180

185

190

காண்பார் மருளக் கைவலான் இயற்றிய மாண்பார் சுதையின் பாவைகள் கண்டும், எழுப்பிய சுவரென எண்ணிட இருபுறம் செழித்தவை ஒழுங்குறக் கறித்திடும் செடிகள் வரிசையின் அமைந்த வனப்பினைக் கண்டும், சுரும்பினம் விரும்பா அரும்புகள் மிடைத்திட நரம்பின் இசைஎன முரலும் வண்டினம் முத்துற மொய்த்து நறுங்கேன் முகக்கப் பக்தியின் அமைந்த பல்வகை மலர்கள் வியன்மனம் பரப்பி விரிந்துள கண்டும், கயல்மீன் பிறழ்ந்து கள்ளவிழ் மலர்மிசைத் அதுயிலுவ தென்னக் கிடந்து பின் துள்ளிப் புனலிடை மீண்டும் புகுந்து திரியும் செய்குள மாகிய பொய்கை கண்டும், செய்யும் வினைஞர் நேர்த்தியின் இழைத்த அாலின் இழையினும் நுண்கொடி படர்ந்து நாலும் பங்கரின் நன்னலங் கண்டும்,

கிழார்முன் பூங்கொடி

அகத்தும் முகத்தும் ஆர்கரும் உவகை மிகுத்தன ளாகி மேலுயர் பொழிலின் காப்பண் கிறுவிய நலம்பல பழுகிய காப்பமை மாளிதை கண்டனள் புக்குக் கூப்பிய கையினள் வாழ்த்திய வாயினள் மூப்பினே அறிய முடியா முகத்தின் பெருகிலக் கிழவர் முன்னர்க் குறுகினள் ;

பெருகிலக்கிழார் வேண்டல்

பெறலரும் பொருளைப் பெற்றால் என்ன்ப் பெருமகிழ் வெப்திப் பெரியவர் வாழ்த்திப்

146

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/165&oldid=665645" இலிருந்து மீள்விக்கப்பட்டது