பக்கம்:பூங்கொடி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. நூல்நிலையம் அமைத்த காதை

பூங்கொடி வேண்டல்

வாழிய என்றென வாழ்த்திய பெரியீர்! ஏழிரண் டாண்டுகள் இடரொன் றுளதெனக் கூறிடக் கேட்டுளம் கொடுந்துயர் உற்றேன் : மாறிய தவ்விடர் எனும்.அம் மாற்றம் 5 தொடுத்துடன் மொழிந்தீர் அடுத்துளம் மகிழ்ந்தேன்;

படுத்திய அவ்விடர் பாவைகான் உணர எடுத்து மொழிய இயலுமோ பெரும !

என்றிளம் பூங்கொடி இாங்கினள் வேண்ட,

மகள் வரலாறு

நன்று கனிமொழி நவிலுவென் கேண்மோ ! 10 உருவும் எழிலும் உன்போல் ஒருத்தி,

பருவம் கிறைமகள், பாவிஎன் மடமகள், உருவளர் முழுமதி ஒப்பத் திகழ்ந்தனள், ஆடலும் பாடலும் அவட்குயிர் ஆகும், எடவிழ் கோதை எனக்குயிர் ஆகும்,

15 நாடிய துறையில் நன்கனம் தேர்ந்து

149

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/168&oldid=665648" இலிருந்து மீள்விக்கப்பட்டது