பக்கம்:பூங்கொடி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. கோமகன் கொலையுறு காதை

10

15

சண்டிலியின் கணவன் வருகை

மழைவளர் சாரல் மாமலைப் பொதியில் குழலின் இனிய குரலிசை கேட்டுத் தன்வய மிழந்து தமிழிசை வேட்டுப் பயிலும் ஆர்வம் மீக்கூர் பாவை அயில்வேல் விழியள் மயிலியல் சண்டிலி பிரிவினைப் பொருஅன் பேதையின் கணவன் துருவன் என்பான் தோகையைக் கானும் ஆர்வல கிை அணிதிகழ் மாடஞ் சேர்கரு மறுகுகள் செறிந்தெழில் விளங்கும் வேங்கை நகரெனும் வியனகர் புகுந்தோன், ஆங்கண் ஓங்கிய அகல்வாப் மாளிகை வதியிடன் குறுகிஅம் மங்கையைக் கூடிப் புதுமகிழ் வெய்திப் பூரிப் புற்றனன் ,

சண்டிலி நிகழ்ந்தன கூறல்

ஒதும் பொருட்டாற் காதலற் பிரிந்த மாதும் சொழுநன் வரவால் தழைத்த

156

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/175&oldid=665656" இலிருந்து மீள்விக்கப்பட்டது