பக்கம்:பூங்கொடி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

125

130

135

140

கோமகன் கொலையுறு காதை

வாடையுங் தென்றலும் மாறி மாறி நீட்வை வீசலால் நெஞ்சினிற் கனன்று சுடர்விட் டெரிக்கது சொலற்கருங் காமம் , கோமகன் அடங்காக் காமுகன் ஆயினன் , கிறையும் பண்பும் இருகரை யாகச் செறிபுனல் கிகர்க்கும் நெறிபடு காமம் உறுகரை கடந்தது முறைமையும் இகந்தது பொங்கிய வெள்ளம் புகாவழிப் புகுந்தது ;

தங்கிடன் புகுவேன் தையலே சகுவேன் எங்கவள் தப்புவள்? என்மனம் ஒப்புவள் ஆசை பகர்வேன் அவள்கலம் நுகர்வேன் ஏசிய அவளினி என்கை தவருள் : என மனத் தெண்ணி எழுந்து நடந்தனன் ;

நள்ளிரவில் கோமகன்

நள்ளிராப் பொழுதிற் கள்ளனே கி கர்ப்போன் மெல்லென நடந்து நல்லவள் வதியிடன் மனத்துணி வுடனே மயங்கினன் செல்வோன் கனத்தெரி யாவகை தயங்கித் தயங்கிப் புறமும் அகமும் புழுங்கி வியர்க்க உடலும் உளமும் ஒருங்குடன் நடுங்க நெஞ்சினில் துடிப்பும் நெட்டுயிர்ப் பொலியும் விஞ்சும் முறையில் வெடவெடத் தேகினன் ;

துருவன் தொடர்தல்

ஒதுங்கியும் பதுங்கியுஞ் செல்லுமோ ருருவம் அரவப் படாஅவகை அடியெடுத் தேகினும் துருவப் பெயரோன் துயிலா விழியில் தெள்ளிதிற் றெளிதாத் துள்ளி எழுந்தவன்

11 161

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/180&oldid=665662" இலிருந்து மீள்விக்கப்பட்டது