பக்கம்:பூங்கொடி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்ெ காடி

185

190

195

200

205

பூங்கொடி கிழாருடன் வருதல்

கன்றிய நெஞ்சொடும் கலையுணர் கிழாரொடும் வந்து கின்றனள் வழுவிலாப் பூங்கொடி ; நொந்தவள் முகத்தினை துண்ணிகின் நோக்கி

முந்துறக் காவல் முதல்வர் வினவினர் ;

காவலர் வினவும் காரிகை விடையும்

ஈண்டிவ் விளையோன் கோமகன் என்பான் மாண்டமை பற்றி மங்கையுன் விளக்கம் வேண்டுவல் பூங்கொடி விளம்புக’ என்னலும்,

நெருநல் மாலை பெருகிலக் கிழாரின் பெருமனே புகுந்து பெரியவ ரவரொடு நெடிதுரை யாடி நேரிசை பாடி விடியுமுன் னிரவில் மீளும் பொழுதிற் படிமிசை இவனுடல் படிக்கது கண்டு துடிமன முடையேன் தோழியைக் கூஉப் வயங்கிழை காணுது வழியொன் றறியாது மயங்கி வீழ்ந்தனென் மற்றாென் றறியேன் என்பது கேட்டோர் . இவற்கும் கினக்கும் முற்பகை யுண்டோ? மொழிக என்றனர் ;

பொதுப்பணி பூண்டேற்குப் புன்மைப் பகைமை எதற்கு நிலமிசை எவரும் பகையிலேன்

கொலையுனும் இம்மகன் கொடியிடை கின்பாற் பலமுறை வந்து பழகலும் உண்டோ:

ஆம்அவன் பலகால் அணுகுவன் என்பால் தோமறும் இசைபயில் தொழிலோன் ஆதலின் ;

எழில்மிகும் கின்பால் இளையோன் காதல் விழைந்ததும் உண்டோ மொழிந்ததும் உண்டோ ? .

174

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/193&oldid=665676" இலிருந்து மீள்விக்கப்பட்டது