பக்கம்:பூங்கொடி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

65

70

75

80

85

அடிகளார் வாழ்த்து

  • பழியெனுங் கருமுகில் பாவையாங் திங்களை வழியினில் மறைத்தது, கழிபடர் ‘இருள்எம் உளக்கினிற் பரந்து வளைத்த தாயினும் கணத்தினில் முகிலிருள் காற்றிற் பறந்தன; வாழிய மகளே! வாழிய மகளே ! வளர்தமிழ்ப் பணிக்கு வருமிடர் பலவாம், தளர்மனங் கொள்ளேல் காயே நம்முயிர் இழப்பினும் இழப்போம் இனியாங் தாய்மொழி வளர்ப்பதே எங்கடன் வாழிய மகளே ! உயிரும் உடலும் ஒழிவன வாயினும் செயிாறு நம்பணி செந்தமிழ்க் காகின் உயரிய புகழொடு ஒண்டமிழ் வாழும், வாழிய வாழிய வண்டமிழ்க் கொண்டே : எனப்பல கூறி இயன்மொழி வாழ்த்து மனத்தொடு வாழ்த்தினர் மலேயுறை யடிகள் ;

கிலக்கிழார்க்கு அறிமுகஞ் செய்தல்

அவ்வுழை கிலக்கிழார் அணுகின ராகச் செவ்விய பூங்கொடி சென்னி ஆழ்த்தி,

ஈங்கிவள் என்னை ஈன்றவள் ஆவள் பாங்குயர் அருண்மொழிப் பெயரினள் ஐய! காங்கிய துயரொடு தாயிவள் இருந்துழி நீங்கிட அத்துயர் கின்றருள் புரிந்தவர், குறளகம் என்னும் அருளகங் கண்டவர், குறள்நெறி திறம்பாக் கொள்கையர் இவராம், கலைபல பரவ வழிபல கண்டவர்

மலேயுறை யடிகள் எனும்பெயர் மருவும்

188

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/207&oldid=665691" இலிருந்து மீள்விக்கப்பட்டது