பக்கம்:பூங்கொடி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

115

120

125

130

135

நிலக்கிழார் வியப்பும் திகைப்பும்

திகைத்தவ ணிருக்கும் தெரிவை அருண்மொழி முகத்தினை முகத்தினே முதியவர் நோக்கி வியப்பும் திகைப்பும் விளங்கா ஐயமும் மனத்தினுள் தோன்ற மயங்கி யிருந்தனர்;

அடிகளார் வினவுதல்

இமையா நாட்டத் திருந்திடும் பெரியரை அமைந்தகன் மனக்தர் அடிகளும் நோக்கி

அருண்மொழி யாகிய அரிவையின் முகத்தை மருளுறப் பார்த்து மயங்கிய கென்னேகொல்? அகத்துப் பொருகெழும் அளப்பருங் குழப்பம் முகத்தினில் கண்டேன் முற்றவும் உணர எமக்கவை கூற இயலுமேல் இயம்புக! மனக்குறை மாறும் மற்றவர்க் குரைப்பின் இனத்தவ ரென்றே எம்மையும் எண்ணுக ! என்றுளங் கனிய இசைத்தன ராகக்

கலக்கத்திற்குக் காரணம்

கன்றிய மனத்துக் கலையறி கிழவர் : நன்றறி வுடைய நாவல ரேறே ! இன்றுநீர் இருவரும் எழுந்திவண் வரலால் தொன்று பழகிய தொடர்பும் உறவும் உடையேன் போல உள்ளங் களித்தேன் ; காரண மில்லாக் கலக்கமும் முளைத்தது ; யாரென அறியா அருண்மொழி யின்முகம் பாரினில் கிகரிலே எனும்படி வாழ்ந்து கழிக் கனன் நாளிற் படர்ந்த கினேவெலாம் சுழிந்து சுழிந்து தோன்றிடச் செய்தது ;

190

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/209&oldid=665693" இலிருந்து மீள்விக்கப்பட்டது