பக்கம்:பூங்கொடி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

110

115

120

125

யாழ்நூல் விளக்க வேண்டுதல்

பனிமலர்க் கூந்தல் பைக்கொடி அரிவை முனிவர் தம்பால் மொழிந்திவை வேண்டினள் வாழ்நாள் அனைத்தும் வளரறங் காப்போப் ! யாழ்ஆால் முழுதும் நவையற உணரும் ஆற்றல் உடையேன் அல்லேன் ஆதலின் போற்றி அதன்றிறம் புகலுதி பெரும

என்பன கூறி இருந்தனள் ஆங்கண் ;

யாழ்நூல் விளக்குதல் *

அன்புளங் கொண்டார் அவள்மொழிக் கிசைந்து

மன்பதைக் குணர்த்துதல் என்பணி யாகும் மறைந்த இக் கருவியின் மாண்புகள் யாவும் திறந்தெரிந் துணர்வையேல் தெரிவைகின் பணிக்கே அரண் செயும் ஆதலின் அறைகுவென் எனமொழிக்

யாழின் வகை யுணர்த்தல்

காயிரம் நரம்பான் அமைந்ததற் பேரியாழ் கோயுறும் அமுதிசை பாய்வுறும் சீறியாழ் மீன்போல் வடிவம் மேவிய மகாயாழ் தேன்போல் நரம்பிசை தெரிக்கும் சகோடயாழ் முளரியாழ் வில்யாழ் முதலன விளக்கிப் பழகிய வீணேயின் பான்மையும் உரைத்துப்

யாழுறுப் புணர்த்தல்

பண்ணுறும் யாழின் பல்வகை உறுப்பும் முன்னேய அமைப்பும் முற்றுற உணர்த்தி இலக்கியச் சான்றுகள் எடுக்கெடுத் திசைத்துக்

202–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/221&oldid=665707" இலிருந்து மீள்விக்கப்பட்டது