பக்கம்:பூங்கொடி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

20

25

30

35

40

தமிழுக் கிஃதொரு தனிப்பே ராக்கம் இமிழ்கடல் வரைப்பும் எத்தும்கின் புகழை கின்னுளம் யாதென நிகழ்த்துதி அம்ம

மலையுறையடிகள் மனமிசைக எனல்

என்னலும் அம்மகள் அன்னேயை நோக்கி முன்னுள அடிகள் தம் முகமும் நோக்கினள் : குறிப்புணர் அடிகள் கொடி க்கிவை கூறினர்; பொறுப்புணர் மாங்கர் விருப்புடன் ஏற்கும் அறப்பணி யிஃகாம் ஆதலின் இசைகுவை ! அலர்தொறும் அலர்கொறும் அஞ்சிறை விரித்துப் பலமுறை சுழன்று பசுந்தேன் உறிஞ்சி நலம் நுகர் சுரும்புபோல் நாடொறும் முயன்று பலமொழி பயின்று பயன்றுய்த் தனையால் , ஆங்காங் கணுகி அவ்வவர் கலையும் ஒங்குயர் பண்பும் உணர்ந்தனே யாயின் புதுமைக் கலைகள் தமிழிற் பூக்கும், அருமைத் தமிழும் அவ்விடை மலரும், உரிமை யனேத்தும் உன்மொழிக் கெய்தும், இதற்கொரு மறுப்பும் ஈன்றாள் உரையாள் எதற்கும் கலங்கேல் இசைக்கெழு மகளே! ;

பூங்கொடி இசைந்தெழுதல்

இம்மொழி கேட்ட செம்மனப் பூங்கொடி ‘தும்மொழி நடத்தல் நோன் பெனக் கொண்டுளேன்! நம்மொழி செம்மொழி நலம்பெறல் வேண்டி இல்லறம் என்னலம் இன்னன துறந்தேன் ; நல்லறம் தமிழ்ப்பணி நாடொறும் இயற்றுங் குறிக்கோள் வாழ்வினைக் கொண்டுளேன் அறிவிர்!

206

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/225&oldid=665711" இலிருந்து மீள்விக்கப்பட்டது