பக்கம்:பூங்கொடி.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. சொற்போர் நிகழ்த்திய காதை

10

15

பல்வகை எதிர்ப்பு

பூங்கொடி யின்புகழ் யாங்கணும் ஓங்கிடத் தாங்குதல் ஆற்றாத் தரியலர் புழுங்கி எங்கிய மனத்தொடு எவ்வழி யாயினும் ஆங்கவள் வளர்புகழ் அழிப்பான் வேண்டித் திங்குகள் பலவும் செய்திடுங் குழுவும், தொலைவில் மறைந்து தாண்டுவோர் தாண்ட அலையும் மனத்தினர் ஆடும் பாவைகள் நிலையிலாக் கொள்கை கலையெனப் பூண்டோர் மலையும் நோக்கினர் மதியிலார் குழுவும், உண்மை தன்மை ஒன்றும் அறிகிலார் எண்ணும் ஆற்றல் எதுவும் அறிகிலார் மனத்தால் தீமை மதித்தலும் அறிகிலார் இனத்தால் நல்லவர் எனினும் அறிவெனும் சுடாறி யாமல் சூழிருள் மூழ்கி மடமுறும் மனத்தினர் வஞ்சமில் குழுவும், மெய்ம்மை யுனா மேவுவார் குழுவும், தெய்வப் பணியால் உய்யும் குழுவும்

212

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/231&oldid=665718" இலிருந்து மீள்விக்கப்பட்டது