பக்கம்:பூங்கொடி.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

70

75

80

சொற்போர் நிகழ்த்திய காதை

இசைவாணர் எதிர்ப்பு

பாடும் துறையில் பழகிய மாங்சர் தேடும் பொருளாற் சிறந்தோர் சிலர்தாம் கூடிச் சிலசொல் குறித்தனர் ஆங்கண்;

உள்ளம் உருக்கி ஒப்பிலா இன்ப வெள்ளம் பெருக்கும் வியன்பே ரிசையில் மொழியால் வேற்றுமை மூட்டுதல் நன் ருே? இழிவாம் இச்செயல்; மொழியிங் கெதற்கு? குழலும் யாழும் கொடுத்திடும் இசையில் மொழி.எது கண்டோம்? பழி எது கண்டோம்? இசைவளக் தமிழில் யாண்டுக் கண்டோம்? இசையுணர் வுடையார் எம்மொழி யாயினும் கசையுடன் ஏற்று நடப்பது கண்டோம்; மொழிவெறி விடுத்து முயல்வதே முறை என

வழிவகை கூறி வம்புகள் பேசினர்;

பூங்கொடி மறுமொழி

சினந்தெழும் உணர்ச்சியின் செற்றம் அடக்கி மனங்தெளிக் கரிவை மாற்றம் கொடுத்தனள்,

குயிலும் காகமும்

கூவும் குயில்தன் குரலாற் பாடும்; காகம் தன்குரல் கொண்டே கரையும்; இாவற் குரலேப் பெறுவது காணேம்; பறவையின் இயல்பைப் பகுத்தறி வுளநாம் அறிவதும் இல்லேம், தெளிவதும் இல்லேம்; நமக்குள மொழியை காடுதல் தவிர்த்துப் பிறர்க்குள மொழியாற் பிதற்றுதல் உடையேம்;

215

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/234&oldid=665721" இலிருந்து மீள்விக்கப்பட்டது