பக்கம்:பூங்கொடி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

135

140

145

150

155

தமிழ் வழிபாட்டுக் கெதிர்ப்பு

கோவிலில் தமிழா? கொடுமை கொடுமை ! காவினில் இதுசொல நடுக்குறு உம் எம்முளம் ! முன்னேர் நம்மினும் முழுமதி யுடையர் அன்னேர் நெறியினே அழித்திட முயல்வதோ? முக்திய மொழிகளுள் மூத்ததே ஆயினும் மந்திர வலிமை செந்தமிழ்க் குளதோ ? இடமிகு கோவிலுள் இறைவன் முன்னர்க் கடவுண் மொழியே கழறுதல் வேண்டும் ; மந்திர மொழியாம் மறைமொழி விடுத்துச் செந்தமி ழோதின் தெய்வம் உவக்குமோ?! தேவரின் தூதுவர் ஏவலர் போலிவை கூவினர் ; மேவலர் கொள்ளும் வகையாற் சான்றுடன் மறுமொழி சாற்றுவள் பூங்கொடி,

தமிழர் வழிபடு மொழி எது?

ஈன்றவட் பழிக்கும் இயல்பினே என்றுளிர்! தமிழக வரைப்பில் காப்மொழி ஆட்சி திகழுதல் வேண்டும்; தேவுறு கோவில் விலக்குடைக் கன்று, மயக்குறல் என்கொல்? கலைக்கோர் உறைவிடம் கட்டியோர் தமிழர் உள்ளுறை கடவுளும் உரியவர் நமக்கே அள்ளுற வணங்குவோர் அயலவர் அல்லர் இறைவினை புரிவோர் எதிலர் அல்லர் முறைஎது? வழிபடு மொழி.எது? புகல்விர் !

முன்னேர் நெறிதான்

முன்னேர் நெறியினில் முரண்பா டென்றீர்! முன்னேர் யாரென முடிந்த முடிபாச்

218.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/237&oldid=665724" இலிருந்து மீள்விக்கப்பட்டது