பக்கம்:பூங்கொடி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

180

அறப்போர் நிகழ்த்திய காதை

துன்றிய ஆர்ப்பொலி துளைத்தது விண்ணே; செங்கண் மறவர் சீற்றமும் ஏற்றமும் பொங்குகல் கண்டுளம் பூரிக் கெழுந்து பற்பல அணிகள் பகுக்கனர் அடிகள் பொற்புடன் போற்றினர் போர்க்கொடி ஏற்றினர்;

எங்கணும் மறியல்

அருண்மொழி ஒருபால் அடிகள் ஒருபால் விரிமலர்ப் பூங்கொடி வேறொரு பாலும் உரிமை விழையுநர் ஒவ்வொரு பாலும் அணியணி யாக ஆங்காங் கணுகிப் பணிவும் கனிவும் துணிவும் பூண்டு அரசியல் அலுவல் ஆற்றும் மனகொறும் பாசுங் கோவில் பள்ளிகள் தோறும் பாடம் பயிற்றும் பள்ளிகள் தோறும் பாடும் அரங்கம் பயிலிடங் தோறும்

185 மறியல் செய்தனர்; மருண்டனர் ஆள்வோர்;

190

வெறியொடு காவல் வீரரை ஏவினர்

அனைவரும் சிறைப்படுதல்

ஏவிய காவலர் எத்துனே வெருட்டியும் சாவது துணிந்தவர் சற்றும் விலகிலர் ; அடித்தும் பிடித்தும் அச்சப் படுத்தியும் பிடித்த கொள்கையிற் பிறழ்ந்திலர் மறவர்; வீரர் சீறினர் விலங்கொடு வந்தனர் போரறம் புரிந்திடும் பூங்கொடி முதலா கோறம் பூண்டிடும் நீள்புகழ் அடிகளும்

229

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/248&oldid=665736" இலிருந்து மீள்விக்கப்பட்டது