பக்கம்:பூங்கொடி.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

100

105

110

115

சிறையகம் புகுந்த காகை

மூண்டெழு விலங்கு முதலா வுள்ளவும் என்பு மில்லாப் புன்புழு முதலவும் அன்புடன் முயல்வ தவ்வுணுப் பெறவே : புழுவும் விலங்கும் மொழியறி வில்லன கொழுதகு பிறப்பெனத் தாயவர் ஒதிய விழுமிய மாந்தர் மொழியறி யுடையரால் விலங்கினும் புழுவினும் வேற்றுமை தெரிய நலங்கிளர் மொழியினே நயந்தனர் ஒம்பிட , ஒம்பும் முயற்சியில் உறுதுயர் அடைந்து கேம்பும் வாழ்வில் சிதைந்தவர் பலர்பலர் ;

குடியரசு கொடுத்த உரிமை

ஆட்சியில் ஆசை அரும்புதல் இதோ: மாட்சிமை யின்றெனின் மற்றவர் அங்கே பற்றுதல் விடாஅது சுற்றுதல் ஏனே? பாரா ளுரிமை பரம்பரைச் சொத்தோ: யாரா கினுமவ் வாட்சியில் அமரக் குடியா சாட்சி கொடுத்துள துரிமை; ஆளும் ஈற்றிறம் அமைந்தவர் இவரென வேளை வருங்கால் விளங்குக அறுதி ,

அறப்போர் வெல்லும்

இன்றிவர் அறப்போர் இயற்றிய கதற்கோ? நன்றறி மாந்தர் நவிலார் அங்ஙனம்; பொய்ம்மை எத்தனை புகலினும் கிலக்குமோ? மெய்ம்மை எத்துணே மறைக்கினும் அழியுமோ? அறப்போர் வெல்லும் அன்னே மொழியை மறப்போர் ஆட்சி மண்ணினுட் செல்லும் எனச்சில தலைவரும் இயம்பினர் ஆங்கண் ;

235

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/254&oldid=665743" இலிருந்து மீள்விக்கப்பட்டது