பக்கம்:பூங்கொடி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

70

75

80

90

திருமகள் உணவினேத் திண்டவும் செப்திலள் ; வருமகள் வருந்தி வஞ்சியின் உடம்பைக் கொட்டனள் கழலாய்ச் சுட்டது மெல்லுடல் : சட்டெனக் காவலர்க் குற்ற தரைக்கனள் ;

மருத்துவ மனைக்கு விலங்குடன் செல்லல் வெப்பு நோயின் வேகம் ஏறி

ஒப்பிலாள் படுதுயர் உணர்ந்த காவலர் குற்றம் புரியா நற்றமிழ் மங்கையைப் பற்றும் விலங்கொடு பற்றினர் சென்று மருத்துவ மனேயிற் கிடத்தினர் அங்கோ!

துவண்டனள் பூங்கொடி

ஒருத்தியின் கல்லுடல் உருக்குலைக் திருந்தது ; சிரித்தசெவ் வாயிதழ் விளர்த்துக் கிடந்தது; செந்தமிழ் பேசிச் சிவந்த அவ் வாய்தான் அங்கம் இழந்து நொந்து கிடந்தது ; குழலோ யாழோ குரலோ என்னும் அழகிய இசைகரும் மிடறெழில் சிதைந்தது ; குழலின் காடு குலைந்து பறந்தது ; பிறையினைப் பழித்துப் பேசிய துதலெழில் குறைந்ததோ மறைந்ததோ கூறுவ கறிகிலேம் : குவளைக் கண்கள் கூர்மை யிழங்கன; தவழும் அருளொளி இருளில் தணிந்தது ; படர்ந்த பூங்கொடி பரிதியின் கொடுமை தொடர்ந்து தாக்குறத் துவண்டது போல மடந்தை உடலம் நுடங்கிக் கிடந்தது ;

ஆள்வோர் ஆணை

மருத்துவர் பலப்பல மருந்துகள் தங்தனர் ;

நெருப்பெனச் சுடுநோய் நெகிழ்ந்திட வில்லை :

240

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/259&oldid=665748" இலிருந்து மீள்விக்கப்பட்டது