பக்கம்:பூங்கொடி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

40 சிற்றிடை கொடியைச் சிரிக்கும், பிறையெனும்

45

50

55

60

நெற்றியிற் புருவம் வில்லினே கிகர்க்கும், அவ்வில் லடியில் அம்பென இருவிழி செவ்விதின் நிற்கும், செவ்வா யிதழில் புன்னகை மின்னும், பொலிவுறச் சுருள்படு பின்னலில் இணையாப் பிரிந்துள கருங்குழல் துகலிடைக் கிடந்து நுடங்கும்.அக் காட்சி கவிஞன் ஒவியன் கற்பனே தாண்டும், நடைக்கோர் உவமை நவிலவும் ஒல்லுமோ ?

உலுத்தர் தொல்லை கடைக்தெரு வழியே காரிகை தனியாய் ஏகின் சிற்றினம் எதம் விளைக்கும் ; நாகிளம் பருவ நல்லியல் மாதர் உறுதுணை யின்றி ஊரில் வெளிச்செலின் நரியென வேட்டை நாயெனத் தொடர்ந்தே ஊறுகள் செய்யும் உலுத்தர் பல்கினர் மக்கட் பண்பு மங்குதல் கண்டோம் தெக்கணம் இப்படித் தேய்வது கன்றாே ?

அல்லியின் வரலாறு

வளநகர் ஈங்குநான் வந்தது கேளாய் களமர் கெழுமிய கண்கவர் பொழில்சூழ் மயில்நகர் எனும்பேர் மருவிய நகருள் கோசிகப் பேரினன் குலக்கொடி யாவேன்; மாசி மாமகக் கண்புனல் ஆடும் ஆசை துரப்ப ஆணே கோரினேன்; தங்தை தடுத்தும் தவிரரும் ஆர்வம் உங்த அவருரை உதறித் தன்னிமை

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/33&oldid=665775" இலிருந்து மீள்விக்கப்பட்டது