பக்கம்:பூங்கொடி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

15

20

25

30

35

காவிப் படர்ந்து தாமும் நகைக் கன வண்ணப் பூக்கள் வகைவகை மலர்ந்து கண்ணேப் பறிக்கும் காட்சியைப் பாராய்!

வண்டுக் காட்சி

புதிதாய் வருவோன் பொருந்திய நண்பன் வதியிடன் அறிய வாயில் கோறும் புகுந்து வினவிப் போதல் போலக் தகுந்த மலர் தொறும் கண்மது வுண்ணக் குடைந்து குடைந்து கொட்புறும் வண்டினே நடந்து மெலிந்த நங்காய் நோக்குதி! தென்புறக் கருமொரு தென்றல் மலர்தொறும் அன்புடன் கழுவி அசைந்து மெல்லென நம்முடல் வருடி நலங்கால் நுகர்வாய்!

புற்றரைக் காட்சி பைம்பும் பரப்புப் பசும்படாம் விரிக்கெனக் தோன்றும், இடையிடைத் துளிர்விடு செடிகள் ஈன்ற மலர்வகை எழில்பெற வரைந்த

சித்திர வகையை ஒத்திடல் காணுப் !

பொய்கைக் காட்சி

இந்நாள் விடுமுறை எனுஞ்சொற் செவியுறக் துள்ளிக் குதிக்கும் பள்ளிச் சிருரென வெள்ளைக் கயல்கள் விடுபுனற் பொய்கையில் சாவிக் குதிக்கும், தவஞ்செய் கொக்கு மேவிப் பற்ற முயன்றும் மீன்பெருது ஏங்கிகின் றிசங்குதல் காண்’ என அல்லி

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/37&oldid=665779" இலிருந்து மீள்விக்கப்பட்டது