பக்கம்:பூங்கொடி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

110

115

120

125

130

விருப்பிலா மகளிரை விழைவது முறையோ? கருக்கொரு மிக்கால் காதல் சிறக்கும்; ஒருபால் அன்பால் உறுபயன் ஒன்றிலை; சிறுவர் கூடிச் சிற்றில் இழைத்து மறுகணம் சிதைத்து மகிழ்வுறல் போலக் திருமணம் செய்து திரிவது பேதைமை; அறிவுடை மாக்கர் அதனே ஒவ்வார்; நல்லியல் மாதர் நலம்பெறு வாழ்வைக் செல்வச் செருக்கால் சேர்வுறு பிறப்பால் வெல்லக் கருதின் விளைவது வேறு; சொல்லக் கூசேன் மெல்லியல் மாத ரார் பிள்ளைப் பூச்சிகள் அல்லர் பெரியோப்! காமங் கதுவக் கருத்தினை விடுப்பின் நாமங் கேடுறும் நல்லறங் தீயும் தீமை பற்பல சேர்வது திண்ணம் மாகரார் உளப்பாங் கியாதென உணர்ந்து காதல் மேற்கொளல் கடமை யாகும்;

காமங் கடந்தவள் காமம் என்னும் கள்வன் றனக்கே புகஇடம் கொடாஅள் பூட்டி, நிறைஎனும் காப்பமைத் திருக்கலின் கற்பெனும் மாமணி காத்திடல் வல்லாள், கருத்தினில் வைப்பாய்! என்னுயிர்ப் பாங்கி இல்லற வாழ்வின உன்னுதல் துறந்தே ஒங்குயர் பொதுப்பணி ஒன்றே உயிர்ப்பென உவப்புடன் பூண்டனள் இன்றே அவள்பால் எழுமனம் விடுக! என்றவள் உரைக்க இவ்வுரை அவன்மனம் பொருங்கா முன்னர்ப் பூங்கொடி உருவம் விருங்கா கியதே கோமகன் விழிக்கே. (138)


22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/41&oldid=665784" இலிருந்து மீள்விக்கப்பட்டது