பக்கம்:பூங்கொடி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

15

20

25

80

35

கோமகன் அல்லியை வினவல்

அகல்வோன் அல்லி அணிமுகம் நோக்கி “நகைமுக நங்காப்!என் நலிவினைக் காணுதி ! இளையள் என்னை ஏற்றருள் வாள்கொலோ: உளையும் எனக்குயிர் உவந்தளிப் பாள்கொலோ? எத்திறத் தாள்கின் இளங்கொடி? உரை'எனச், சித்தங் கலங்கிச் செப்புவள் அல்லி,

அல்லியின் மறுமொழி

“எத்தனே முறைகினக் கியம்புவென் பெரும ! வித்தக விண்மீன் வலையினிற் சிக்குமோ?

தத்தை கொடுஞ்சிறைக் கூண்டுள் தங்கிட

விழைதல் உண்டோ விடுவிடு காமம் ! மழைமுகில் கொடுகர வானுயர் கோவில் அழுக்கும் இழுக்கும் பெருகி ஆங்குப் புழுக்கள் நெளிதால் போலச் செல்வர் நெஞ்சில் தீக்குணம் நெளிந்தன போலும்; வெஞ்சினங் கொள்வாள் கின்முகம் நோக்காள் வஞ்சி குறிக்கோள் வாழ்வினள் ஆகலின் விஞ்சுங் காமம் விடுவிடு’ என்றனள்:

அல்லியின் வரலாறு வினவல் “புயலைக் கடுக்கஓர் பொறியும் உளதோ? மயலை விடுக்க மதியு ைபுகன்றன ! கயல்விழி! நன்றெனக் காமுகன் நகைத்து, ‘மடம்படு மாதே மற்றாென்று வினவுவல் வடபுலத் திருப்போன் வளநிதி மிக்கோன் வெருகன் எனும்பெயர் மருவிய ஒருவன் பெறுமனே நீயெனப் பேசிடும் இவ்வூர்;

24;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/43&oldid=665786" இலிருந்து மீள்விக்கப்பட்டது