பக்கம்:பூங்கொடி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

65

70

80

நெஞ்சுரம் ஏறும், கிமிர்ந்து நடப்பீர்! வஞ்சனே மாக்கள் வண்டமிழ் மொழிக்கு நஞ்சினை ஊட்ட நாட்டில் மறைந்துளார்; அவர்கம் கொடுஞ்செயல் அழித்திட வேண்டின் முத்தக் கூத்தன் கல்லறை முன்போப் நத்திக் கொழுகால் நரம்புரம் ஏறும், குருதியில் உணர்ச்சி கொதிக்கும், நும்மினப் பெருமையை அழிப்போர் பிறக்கிடச் செய்வீர்! நாடும் மொழியும் நலம்பெற வேண்டிக் கூடும் நீவிர் கூத்தன் செயற்றிறம் பூணுதல் வேண்டும் பூவையிர் ஆகலிற் காணுதல் வேண்டுமக் கல்லறை என்றனள்,

முத்தக் கூத்தன் வரலாறு கூறுதல் ‘நல்வழி புகன்றாேப்! நன்றி யுடையேம் கல்லறை புகுந்த காளைகன் திறம்எமக்கு அருளுதல் வேண்டும் ஆயிழை எனலும், ‘பிறைநுதல் கல்லீர்! பெட்புடன் கேண்மின்!

பிறமொழி புகுதல்

நம்நாட் டகக்கே ஈயமிலாப் புன்மொழி திணிப்பகற் கொருசிலர் செய்தனர் சூழ்ச்சி; துணுக்குற் றெழுந்தனர் தாயநல் மனமுளோர்; காப்மொழி வளர்ச்சி தளர்ந்த இந் நாட்டில் நோய்என மடமை நுழைந்து பரந்தது; எழுத்தும் அறியார் படிப்பும் உணரார் கழுத்திற் பிறமொழி கட்டுதல் கன்றாே? என்றால் அரையை இகழ்ந்தனர் ஆள்வோர்;

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/53&oldid=665797" இலிருந்து மீள்விக்கப்பட்டது